Home » சிவில் சர்வீஸ் தேர்வு 2019 » சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வை எதிர்க்கொள்வது எப்படி ?

சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வை எதிர்க்கொள்வது எப்படி ?

நேர்முகத் தேர்வு (பர்சனாலிட்டி தேர்வு) என்பது சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி கட்டமாகும். மெயின்ஸ் தேர்வின் முடிவுக்கு பிறகு இந்த தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் - 275. இந்த தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் தான், தேர்வான மாணவர்களின் பட்டியலில் நல்ல இடத்தில் இடம்பெறுவதற்கு வகை செய்யும். அதன் காரணமாக, எழுத்துத்தேர்வுகளில் எவ்வுளவு கவனம் செலுத்த வேண்டுமோ அந்தளவுக்கு நேர்முகத் தேர்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்த நேர்முகத் தேர்வின் நோக்கம், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவரின் தகுதியையும் பன்முகத் தன்மையையும் பரிசோதிப்பதுதான்.

சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு (2019) எவ்வாறு நடைபெறுகிறது ?

நேர்முகத் தேர்வு 20 - 30 நிமிடங்களை வரை நீடிக்கும். இந்த தேர்வில், யு.பி.எஸ்.சி அமைப்பின் உறுப்பினரை தலைவராகக் கொண்ட 5 நபர் குழு, நேர்முகம் நடத்துவர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், நேர்முகத் தேர்வு நடைக்கும் இடத்திற்கு அரை மணி நேரம் முன்பாக இருக்க வேண்டும். அதன் பிறகு, மாணவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் அமர்த்தப்படுவர். யு.பி.எஸ்.சி அமைப்பைச் சேர்ந்த ஊழியர் மாணவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் சார்ந்த வேலைகளைச் செய்ய உதவி செய்வார். இதற்கு பிறகு ஒவ்வொரு மாணவரும், நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்கு அழைத்து செல்லப்படுவார்.

இந்த நேர்முகத் தேர்வின் நோக்கம் என்ன ?

இந்த தேர்வின் நோக்கம், மாணவர்களின் அறிவுத் திறனையோ பொது அறிவை சோதினை செய்வதோ அல்ல. கீழ் கண்ட விதங்களில் மாணவர்கள் சோதிக்கப்படுவார்கள்:

  • தர்க்கரீதியான சிந்தனை
  • விஷயங்களைப் பகுதுப்பார்க்கும் திறன்
  • தெளிவாக கவனித்தல்
  • சமநிலையுடன் முடிவெடுத்தல்
  • தலைமைப் பண்பு
  • மற்றவர்களுடைனான உறவு நிலை
  • பிற மனிதர்களின் உணர்வுகளை மதிப்பளித்தல்

மேலும், நேர்முகத் தேர்வில், மாணவர்கள் மொழியை கையாள்கிற தன்மையும், ஒரு மித்த சிந்தனை போன்ற விஷயங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இவை எல்லாவற்றையும் விட, மாணவர்களின் பேச்சு திறன் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும்.

நேர்முக தேர்வுக்கான முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் ?

சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு காலை மற்றும் மதிய வேளைகளில் நடைபெறும். இந்த தேர்வு, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி), தோல்புர் நிலையம், ஷாஜகான் சாலை, புது டெல்லி - 110069. நேர்முகத் தேர்வுக்கான முடிவுகள், மே மாதம் முதல் மாதத்திலோ இறுதியிலோ வெளியிடப்படும். இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் அவரவர் மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசையில் வெளியிடப்படும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு சில யோசனைகள்

  • நேர்முகத் தேர்வு நடைபெறும் அறையில் தலைவர் உட்பட 5 பேர் கொண்ட குழு இருக்கும். அறையில் நுழையும்போது தன்னம்பிக்கையுடன் நடந்து, குழுத் தலைவர் உட்பட அனைவருக்கும் வணக்கம் அல்லது மரியாதை தெரிவிக்கவும். அவர்கள் அனுமதி அளித்தவுடன் அமர்ந்து கொள்ளுங்கள்.
  • கேள்விகள் கேட்கப்படும்போது, கேள்வி கேட்பவரின் கண்களை அமைதியுடன் கவனிக்க வேண்டும். மற்றவர்களைப் பார்க்கக் கூடாது. பதில் சொல்லும்போது, கேள்வி கேட்பவர்களை நோக்கிய பதில் சொல்ல வேண்டும்.
  • பதில் கூறும்போது வேகமாக கைகளை அசைக்க வேண்டாம் அதே நேரத்தில் மெதுவாக தலையை அசையுங்கள். உங்கள் முன்னால் இருக்கும் மேஜையின் மீது கைகளை வைக்க வேண்டாம்.
  • தேர்வுக்கு குழு உறுப்பினர்கள் உங்களிடம் நீண்ட நேரம் பேசும் பட்சத்தில் அமைதியாக கவனிக்க வேண்டும். பதில் கூறுவதற்கு முன்பாக சில நொடிகள் யோசித்து பதில் கூறவும்.
  • விவாதம் ஏற்படும்பட்சத்தில் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உங்களது கருத்தில் பிடிவாதம் காட்ட வேண்டாம்.
  • கேள்விகள் கேட்கப்படும்போது, அந்த கேள்வியில் இருந்து சில வார்த்தைகள் எடுத்து பதிலைத் துவங்கவும். இவ்வாறு பதில் அளித்தால், நீங்கள் கேள்விகளை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்கிற எண்ணம் குழு உறுப்பினருக்கு தோன்றும்.
  1. யு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வு 2019 க்கு தயாராகுவது எப்படி ?
  2. யு.பி.எஸ்.சி மெயின்ஸ் தேர்வு 2019
  3. சிவில் சர்வீஸ் பணி மற்றும் சம்பளம்
  4. விண்ணப்பிக்கும் முறை
  5. யு.பி.எஸ்.சி தேர்வு மையங்கள்
  6. சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி செயல்முறைகள்
  7. தகுதி - கல்வி, வயது வரம்பு
  8. சிவில் சர்வீஸ் தேர்வை எவ்வுளவு முறை எழுதலாம் ?
  9. பிரிலிமினரி தேர்வு
  10. மெயின்ஸ் தேர்வு பாடத்திட்டம்
  11. யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வு
  12. கட் ஆப் மார்க்
  13. பிரிலிமினரி தேர்வுக்கு தயாராகுவது எப்படி ?
  14. பிரிலிமினரி தேர்வில் பொது அறிவு பாடத்துக்கு தயாரவது எப்படி ?
  15. ஒரு பாடத்தைத் தேர்வு செய்வது எப்படி ?
  16. சிவில் சர்வீஸ் பணியிடங்கள்
  17. சிவில் சர்வீஸ் காலி பணியிடங்கள்
  18. ஒரு குறிப்பிட்ட சிவில் சர்வீஸ் பணியை தேர்வு செய்வது எப்படி ?
  19. மாற்றுதிறனாளி மாணவர்கள் தேர்வு செயல்முறை
  20. தேர்வில் போட்டியிட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள்
  21. யு.பி.எஸ்.சி தொலைபேசி எண்கள்