Home » சிவில் சர்வீஸ் தேர்வு 2019 » யு.பி.எஸ்.சி மெயின்ஸ் தேர்வு 2019

யு.பி.எஸ்.சி மெயின்ஸ் தேர்வு 2019

சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வின் நோக்கம் என்பது ஒரு நபர் தனது அறிவை சரியானப்படி செயல்படுத்திக் காட்டுவதற்கு தேவையான தகுதிகளை சரிபார்ப்பது தான். இந்த தேர்வு, அந்த தேர்வு எழுதும் மாணவரின் அறிவார்ந்த செயல்பாடுகளை பரிசோதித்து பார்க்கும். யு.பி.எஸ்.சி அமைப்பு, 2019ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகளை ஏற்கனவே அறிவித்து விட்டது. பிரிலிமினரி தேர்வு, ஜூன் மாதம் 2ம் தேதியும், மெயின்ஸ் தேர்வு செப்டம்பர் மாதம் 20ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இதுவரையில் நடைபெறவில்லை. வழக்கம்போல, 9 வினா தாள்கள் எழுத்துத் தேர்வாகவே நடைபெறும்.

ஐ.ஏ.எஸ் மெயின்ஸ் தேர்வுக்கு தயார்ப்படுத்துக்கொள்வது எப்படி ?

மெயின்ஸ் தேர்வில் 9 வினா தாள்கள் உள்ளன. இந்த அனைத்துமே விரிவாக எழுத வேண்டிய வகையைச் சேர்ந்தவை. 1) இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று (300 மதிப்பெண்கள்). 2) ஆங்கிலம் (300 மதிப்பெண்கள்). இதில், இரண்டு வினா தாள்களில் கண்டிப்பாக எழுத வேண்டும். இந்த வினா தாள்கள் தேர்வுகளின் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி தேர்வுப்பட்டியலில் எடுத்துக் கொள்ளப்படாது.

யு.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின்படி, நான்கு பொது அறிவு கேள்வித்தாள் (தலா 250 மதிப்பெண்கள்) உள்ளன. இதன்படி, 1000 மதிப்பெண்கள் இந்த கேள்வித்தாள்களுக்கு உண்டு. பொது அறிவு கேள்வித்தாள்களின் தரம் என்பது இளங்கலைப் பட்டப்படிப்பின் அளவில் இருக்கும். இதுதவிர, ஒரு குறிப்பிட்ட பாடத்தைத் தேர்வு செய்யவும் முடியும். இதில் இரண்டு வினாதாள்களுக்கு மொத்தம் 600 மதிப்பெண்கள் உள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல பாடத்தை தேர்வு செய்யலாம். ஆனால், இலக்கியம் என்கிற பாடத்திட்டத்தை தேர்வு செய்யும் மாணவர், தனது இளங்கலைப் பட்டப்படிப்பில் இலக்கியத்தைத் தேர்வு செய்து இருக்கக் கூடாது.

இறுதித் தேர்வு (நேர்முகத் தேர்வு- பர்சனாலிட்டி தேர்வு) - 275 மதிப்பெண்கள் கொண்டது. மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் நேர்முகத் தேர்வு நடைபெறும். யு.பி.எஸ்.சி அமைப்பு அதற்கேற்ப சரியான மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்தும்.

மெயின்ஸ் தேர்வு - 1750 மதிப்பெண்கள். நேர்முகத் தேர்வு - 275 மதிப் பெண்கள். மொத்தம் - 2025 மதிப்பெண்கள்

யு.பி.எஸ்.சி மெயின்ஸ் தேர்வு முறைகள்

தாள் - அ
மொழிப்பாடம் - 300 மதிப்பெண்கள்
மாணவர்கள் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செயலாம்.

தாள் - ஆ
ஆங்கிலம் – (300 மதிப்பெண்கள்)

தாள் - 1
கட்டுரை பாடத்திட்டம் - 250 மதிப்பெண்கள்
மாணவர் விரும்பும் மொழியில் எழுதாலம்

தாள் - 2
பொது அறிவு - 1 (250 மதிப்பெண்கள்)
(இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம்; உலக வரலாறு மற்றும் புவியியல்)

தாள் - 3
பொது அறிவு - 2 (250 மதிப்பெண்கள்)
(அரசு நிர்வாகம், அரசியலமைப்பு சட்டம், அரசியல், சமூக நீதி மற்றும் சர்வதேச உறவுகள்)

தாள் - 4
பொது அறிவு - 4 (250 மதிப்பெண்கள்)
(தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, உயிரியல், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேம்பாடு)

தாள் - 5
பொது அறிவு - 4 ( 250 மதிப்பெண்கள்)
(நெறிமுறைகள், நேர்மை மற்றும் தன்னம்பிக்கை)

பொது அறிவு தாள்களின் மொத்த மதிப்பெண்கள் - 1000

தாள் - 6
ஏதேனும் ஒரு பாடத்திட்டம் - தாள் 1 - 250 மதிப்பெண்கள்

தாள்- 7
ஏதேனும் ஒரு பாடத்திட்டம் - தாள் 2 - 250 மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள் - 1750

  1. யு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வு 2019 க்கு தயாராகுவது எப்படி ?
  2. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வை எதிர்க்கொள்வது எப்படி ?
  3. சிவில் சர்வீஸ் பணி மற்றும் சம்பளம்
  4. விண்ணப்பிக்கும் முறை
  5. யு.பி.எஸ்.சி தேர்வு மையங்கள்
  6. சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி செயல்முறைகள்
  7. தகுதி - கல்வி, வயது வரம்பு
  8. சிவில் சர்வீஸ் தேர்வை எவ்வுளவு முறை எழுதலாம் ?
  9. பிரிலிமினரி தேர்வு
  10. மெயின்ஸ் தேர்வு பாடத்திட்டம்
  11. யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வு
  12. கட் ஆப் மார்க்
  13. பிரிலிமினரி தேர்வுக்கு தயாராகுவது எப்படி ?
  14. பிரிலிமினரி தேர்வில் பொது அறிவு பாடத்துக்கு தயாரவது எப்படி ?
  15. ஒரு பாடத்தைத் தேர்வு செய்வது எப்படி ?
  16. சிவில் சர்வீஸ் பணியிடங்கள்
  17. சிவில் சர்வீஸ் காலி பணியிடங்கள்
  18. ஒரு குறிப்பிட்ட சிவில் சர்வீஸ் பணியை தேர்வு செய்வது எப்படி ?
  19. மாற்றுதிறனாளி மாணவர்கள் தேர்வு செயல்முறை
  20. தேர்வில் போட்டியிட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள்
  21. யு.பி.எஸ்.சி தொலைபேசி எண்கள்