Home » சிவில் சர்வீஸ் தேர்வு 2019 » யு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வு 2019 க்கு தயாராகுவது எப்படி ?

யு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வு 2019 க்கு தயாராகுவது எப்படி ?

யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொரு மாணவரும், அந்த தேர்வு குறித்த பாடத் திட்டங்கள் மற்றும் பிற தகுதிகள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியம். யு.பி.எஸ்.சி தேர்வின் அடிப்படை விஷயங்கள் குறித்து சரியான புரிதல், பிரிலிமினரி மற்றும் மெயின்ஸ் தேர்வுக்கு தேவை. மற்றபடி இந்த இரு தேர்வுகளுக்கும் தயார்படுத்திக் கொள்வதில் சில வேறுபாடுகளை மட்டுமே காண முடியும்.

யு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வுக்கு அதிக அளவில் தகவல்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும், மேலாட்டமாக அறிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். அதனால், இங்கு சில யுக்திகளை அளிக்க இருக்கிறோம். பிரிலிமினரி தேர்விற்கான பாடத்திட்டம் என்பது பொது அறிவு தொடர்பான எல்லா தகவல்களையும் கொண்ட பாடத்திட்டமாகும். அதனால், அந்த தேர்வுக்கு சரியானபடி தயாராகுவது அவசியம். பிரிலிமினரி பாடத்திட்டத்தின் வரையறை சரியானபடி வகுக்கப்படாததால், அது குறித்த அச்சம் வேண்டாம். பிரிலிமினரி கேள்வித்தாள்கள் ஒரு முறை பார்த்து அதை பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டால் போதும் அந்த பயம் நீங்கி விடும். கேள்விகள் கேட்டப்பட்ட விதத்தை நன்கு கவனித்தாலே அந்த தேர்வுக்கு எப்படி தயாராகவேண்டும் என்கிற எண்ணம் எழும்.

பிரிலிமினரி பொது அறிவு பகுதி எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது ?

கீழ்கண்ட விதங்களில், பொது அறிவு பகுதி பிரிக்கப்பட்டுள்ளது:
வரலாறு: தற்கால வரலாறு மற்றும் விடுதலைப் போராட்டம் போன்ற விஷயங்களில் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரலாற்றில் மேலோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளன.

புவியியல்: வரை படம் மற்றும் பொது புவியியலுக்கு அதிகம் முக்கியத்துவம். குறிப்பாக, வரைபடம் சார்ந்த விஷயங்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளன.

பொது அறிவியல்: உயிரியல், நிலவியல் மற்றும் இயற்கை சார்ந்த பொதுவான விஷயங்கள்.

நடப்பு நிகழ்வுகள்: தினமும் நாளிதழ்களில் வெளிவரும் நாட்டு நடப்பு செய்திகள். பொது அறிவு புத்தகங்களில் உள்ள தகவல்கள்.

பிற பகுதிகள்: இதுதவிர, பிரிலிமினரி பாடத்திட்டங்களில் உள்ள மற்ற பகுதிகளைப் படித்து அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

பிரிலிமினரி பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள் மற்றும் பகுதிகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்பட்ட தனியாக செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்த தேர்வில் வெற்றி பெற முடியும். கீழ்கண்ட தலைப்புகளில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  1. யு.பி.எஸ்.சி மெயின்ஸ் தேர்வு 2019
  2. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வை எதிர்க்கொள்வது எப்படி ?
  3. சிவில் சர்வீஸ் பணி மற்றும் சம்பளம்
  4. விண்ணப்பிக்கும் முறை
  5. யு.பி.எஸ்.சி தேர்வு மையங்கள்
  6. சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி செயல்முறைகள்
  7. தகுதி - கல்வி, வயது வரம்பு
  8. சிவில் சர்வீஸ் தேர்வை எவ்வுளவு முறை எழுதலாம் ?
  9. பிரிலிமினரி தேர்வு
  10. மெயின்ஸ் தேர்வு பாடத்திட்டம்
  11. யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வு
  12. கட் ஆப் மார்க்
  13. பிரிலிமினரி தேர்வுக்கு தயாராகுவது எப்படி ?
  14. பிரிலிமினரி தேர்வில் பொது அறிவு பாடத்துக்கு தயாரவது எப்படி ?
  15. ஒரு பாடத்தைத் தேர்வு செய்வது எப்படி ?
  16. சிவில் சர்வீஸ் பணியிடங்கள்
  17. சிவில் சர்வீஸ் காலி பணியிடங்கள்
  18. ஒரு குறிப்பிட்ட சிவில் சர்வீஸ் பணியை தேர்வு செய்வது எப்படி ?
  19. மாற்றுதிறனாளி மாணவர்கள் தேர்வு செயல்முறை
  20. தேர்வில் போட்டியிட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள்
  21. யு.பி.எஸ்.சி தொலைபேசி எண்கள்