Home » சிவில் சர்வீஸ் தேர்வு 2019

சிவில் சர்வீஸ் தேர்வு 2019

இந்தியாவிலேயே மிகவும் போட்டி நிறைந்த மற்றும் அதிக முக்கியமான தேர்வுகளில் சிவில் சர்வீஸ் தேர்வும் ஒன்று. இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி), ஒவ்வொரு ஆண்டு இந்த தேர்வை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், இந்திய அரசின் பல்வேறு சிவில் சர்வீஸ் பணிகளுக்கு அமர்த்தப்படுபவர். இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் என்று 24 சிவில் சர்வீஸ் பணிகள் உள்ளன.

இந்தியாவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலேயே மிகவும் கடினமாக கருதப்படுகின்ற இந்த தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த சிவில் சர்வீஸ் தேர்வு என்பது மூன்று கட்டங்களில் நடத்தப்படுகின்றது. அவை பிரிலிமினரி தேர்வு( முதல் நிலைத் தேர்வு), மெயின்ஸ் தேர்வு (இரண்டாம் நிலைத் தேர்வு), இறுதி தேர்வு (பர்சனாலிஸ்ட் அல்லது நேர்முகத் தேர்வு) ஆகும். இந்த தேர்வு முறையான கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை நீடிக்கும்( ஜூன் முதல் டிசம்பர் வரை).

சிவில் சர்வீஸ் 2019 தேர்வை அணுகுவது எப்படி ?

முதலில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேவையான பாடத் திட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ப, ஒவ்வொரு மாணவரும் தன்னை தயார்படுத்திக் கொள்வது அவசியம். இவை அனைத்துமே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக திட்டமிட வேண்டிய அவசியம்.

பாடத்திட்டங்கள் குறித்த தெளிவான புரிதலும், தேர்வு முறைகள் குறித்த புரிதலும் சரியாக இருந்தால் மட்டுமே மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பாடத்திட்டங்களின் மைய கருத்துகளை கிரகித்துக் கொள்ளுதல், பழைய வினாத்தாளைப் படித்தல் போன்றைவை தேர்வுக்கு தயார்படுத்தும் செயல்முறையாகும். ஆனால், கடுமையான உழைப்பும், திட்டமிட்ட செயல்பாடுகளும் மிகவும் அவசியமாகும். ஒரு பாடத்தையும், தேர்வுகளையும் அணுகுவதற்கு தேவையான ஒரு அட்டவணை ஒன்றை தயாரித்துக் கொள்வது மிக மிக அவசியம். இந்த அட்டவணை, பாடத்திட்டங்களின் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் சரியான அளவில் திட்டமிட்டபடி நடைபெற்றால் மட்டுமே ஒரு மாணவர், சிவில் சர்வீஸ் தேர்வு 2019 எழுத விண்ணப்பிக்கத் தகுதியானவராக கருத முடியும்.

சிவில் சர்வீஸ் தேர்வு என்பது குறுகிய கால அளவைக் கொண்ட தேர்வு முறை அல்ல. மூன்று அடுக்குகள் கொண்ட ஒரு வருடம் முழுவதும் பரவி இருக்கின்ற தேர்வு முறையாகும். இதனால், ஒரு முறை மட்டுமே தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். பல மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற முயற்சிப்பர். அதனால், இந்த தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெற, விடா முயற்சியும், கடும் உழைப்பும் தேவை. இதன் பொருட்டு, குறிப்பிட்ட கால அளவுடன் கூடிய அட்டவணை ஒன்றை மாணவர்கள் உருவாக்கி அதன்படி படித்தல் அவசியம் ஆகும்.

ஒரு வருட காலத்துக்கு இந்த தேர்வு நீண்டு இருப்பதால், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். அதனால், மாணவர்கள் தங்களது குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களுடன் மன இறுக்கத்தைப் போக்கக் கூடிய நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. இது போன்ற செயல்பாடுகள், மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாண்மையானோர் பல வருடங்கள் தொடர்ந்து எழுதியவர்களாகவே இருப்பர். ஏனென்றால், பிரிலிமினரி தேர்வில் வெற்றிகள் அனைவருமே, மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெறுவதில்லை. மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே இறுதி தேர்வு (நேர்முகத் தேர்வு) வெற்றி பெறுவதில்லை. அதனால், பாடத்திட்டங்களை சரியாக புரிந்து கொண்டு, முறையாக கால அட்டவணையில் படி கடுமையாக உழைத்த மாணவர்களுக்கு மட்டுமே, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

  1. யு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வு 2019 க்கு தயாராகுவது எப்படி ?
  2. யு.பி.எஸ்.சி மெயின்ஸ் தேர்வு 2019
  3. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வை எதிர்க்கொள்வது எப்படி ?
  4. சிவில் சர்வீஸ் பணி மற்றும் சம்பளம்
  5. விண்ணப்பிக்கும் முறை
  6. யு.பி.எஸ்.சி தேர்வு மையங்கள்
  7. சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி செயல்முறைகள்
  8. தகுதி - கல்வி, வயது வரம்பு
  9. சிவில் சர்வீஸ் தேர்வை எவ்வுளவு முறை எழுதலாம் ?
  10. பிரிலிமினரி தேர்வு
  11. மெயின்ஸ் தேர்வு பாடத்திட்டம்
  12. யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வு
  13. கட் ஆப் மார்க்
  14. பிரிலிமினரி தேர்வுக்கு தயாராகுவது எப்படி ?
  15. பிரிலிமினரி தேர்வில் பொது அறிவு பாடத்துக்கு தயாரவது எப்படி ?
  16. ஒரு பாடத்தைத் தேர்வு செய்வது எப்படி ?
  17. சிவில் சர்வீஸ் பணியிடங்கள்
  18. சிவில் சர்வீஸ் காலி பணியிடங்கள்
  19. ஒரு குறிப்பிட்ட சிவில் சர்வீஸ் பணியை தேர்வு செய்வது எப்படி ?
  20. மாற்றுதிறனாளி மாணவர்கள் தேர்வு செயல்முறை
  21. தேர்வில் போட்டியிட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள்
  22. யு.பி.எஸ்.சி தொலைபேசி எண்கள்